முதல் சந்திப்பிற்கு முன்னால் மோடியை ‘உண்மையான நண்பர்’ என்றார் டிரம்ப்

மோடி அமெரிக்கா போய் சேர்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அவரை ‘உண்மையான நண்பர்’ என்று டிரம்ப் விளித்துள்ளார்.

Update: 2017-06-24 23:59 GMT
வாஷிங்டன்

தனது டிவீட் பதிவில் “இந்தியப் பிரதமர் மோடியை வரவேற்கும் சமயத்தை எதிர்நோக்குகிறேன். உண்மையான நண்பரான அவரிடம் பல ராஜதந்திர விஷயங்கள் குறித்து விவாதிக்கவுள்ளேன்” என்றார்.

பலமுறை மோடியும், டிரம்பும் தொலைபேசியில் பேசியிருந்தாலும் நேரில் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். 

மோடி தனது டிவீட்டில் “அமெரிக்காவுடனான இந்தியாவின் கூட்டணி பலதரப்பட்ட விஷயங்களையும், பன்முகத்தன்மையையும் கொண்டதாகும். அரசு மட்டுமின்றி பலவிதமான பங்கேற்பாளர்கள் உள்ளனர்” என்றார். 

மேலும் செய்திகள்