பயங்கரவாதம் பாகிஸ்தானுக்கு இந்தியா - அமெரிக்கா கூட்டாக வலியுறுத்தல்

பாகிஸ்தான் மண்ணை பயங்கரவாதத்திற்கு அனுமதிக்க மாட்டோம் என உறுதி செய்யுங்கள் என அந்நாட்டை இந்தியா - அமெரிக்கா கூட்டாக வலியுறுத்தி உள்ளது.

Update: 2017-06-27 04:09 GMT

வாஷிங்டன்,

பிற நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்களை முன்னெடுக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தன்னுடைய மண்ணில் இடமளிக்க மாட்டோம் என்பதை உறுதி செய்ய வேண்டும் என இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டாக வலியுறுத்தி உள்ளது. இரு நாடுகளும் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் டி-கம்பெனி பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கூட்டாக செயல்படவும் ஒப்புக்கொண்டு உள்ளன. அமெரிக்கா சென்று உள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

இதனையடுத்து இருதரப்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், மும்பை பயங்கரவாத தாக்குதல், பதான்கோட் பயங்கரவாத தாக்குதல் மற்றும் பாகிஸ்தானில் மண்ணில் செயல்பட்டுக் கொண்டு இந்தியாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் தொடர்பு உடையவர்கள் பாகிஸ்தான் நீதியின் முன் நிறுத்த வேண்டும் எனவும் இருநாடுகளும் பாகிஸ்தானை வலியுறுத்தி உள்ளது. பிரதமர் மோடி - டொனால்டு டிரம்ப் இடையிலான பேச்சுவார்த்தையில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையான முக்கிய பங்கினை பெற்றது என வெளியுறவுத்துறை செயலாளர் எஸ் ஜெய்சங்கர் கூறிஉள்ளார். 

பிரதமர் மோடி - டொனால்டு டிரம்ப் இடையிலான பேச்சுவார்த்தையின் போது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் தாக்குதலை மேற்கொள்வது தொடர்பாகவும், ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடந்து உள்ளது.

மேலும் செய்திகள்