ராக்கெட் என்ஜின் சோதனை நடத்தியதாக வடகொரியா மீது பரபரப்பு குற்றச்சாட்டு

ராக்கெட் என்ஜின் சோதனை நடத்தியதாக வடகொரியா மீது அமெரிக்க கண்காணிப்புக்குழு குற்றம் சாட்டியுள்ளது.

Update: 2017-06-28 05:09 GMT
சியோல்,

வடகொரியா, ஐ.நா. சபையின் தீர்மானங்களை மீறி, உலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அணு குண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்காக ஐ.நா. சபையும், அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய நாடுகளும் அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஆனால், இத்தகைய தடைகள் எதையும் பொருட்படுத்தாத  வடகொரியா, தொடர்ந்து இது போன்ற அத்து மீறிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  

இந்த நிலையில், ராக்கெட் என்ஜின் சோதனையை அண்மையில் வடகொரியா நடத்தியதாக கண்காணிப்புக்குழு குற்றம் சாட்டியுள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணைகளை மேம்படுத்த இத்தகைய சோதனைகளை வடகொரியா நடத்தியிருக்க கூடும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐசிபிஎம் என்ஜின் மூலமாகவோ அல்லது வடக்கு சோகே செயற்கைகோள் ஏவுதளத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டதா?என்பது குறித்து தெளிவான விவரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஜூன் 22 ஆம் தேதி வாக்கில் வடகொரியா சிறிய ரக ராக்கெட் என் ஜின் சோதனை நடத்தியிருப்பதாக செயற்கைகோள்  படங்களின் தரவுகளை மேற்கோள் காட்டி வாஷிங்டன்னில் உள்ள கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்