இலங்கை வடமாகாண மந்திரியாக முன்னாள் விடுதலை புலிகள் தலைவரின் மனைவி பதவியேற்றார்

விடுதலை புலிகளின் முன்னாள் தலைவரின் மனைவி இலங்கை வடமாகாண கவுன்சிலில் இன்று மந்திரியாக பதவி ஏற்று கொண்டார்.

Update: 2017-06-29 13:07 GMT
கொழும்பு,

இலங்கையில் வடக்கு மாகாண கவுன்சிலில் மந்திரி சபை மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.  இதனை தொடர்ந்து முதல் மந்திரி சி.வி. விக்னேஸ்வரன் மகளிர் மறுவாழ்வு மற்றும் விவகார துறை மந்திரியாக ஆனந்தி சசீதரனை நியமித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விடுதலை புலிகள் நிர்வாகம் செய்து வந்த காலத்தில் அதன் கிழக்கு பகுதி அரசியல் தலைவராக வேலாயுதம் சசீதரன் என்ற எழிலன் என்பவர் பதவி வகித்து வந்துள்ளார்.

இவரது மனைவியான ஆனந்தி, கடந்த 2009ம் ஆண்டு மே மாதத்தில் இறுதி போரின்பொழுது தனது கணவர் ராணுவத்திடம் சரண் அடைந்து உள்ளார்.  அப்பொழுது இருந்து அவர் காணாமல் போய் விட்டார் என கூறியுள்ளார்.

ஐ.நா. வின் மனித உரிமைகள் கவுன்சில் உள்ளிட்ட சர்வதேச உரிமைகள் அமைப்புகளிடம் அளித்துள்ள தனது புகாரில் எழிலன் காணாமல் போன விசயத்தினை ஆனந்தி குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்