இங்கிலாந்தில் பயங்கரம் இந்திய இளம்பெண் கற்பழித்து கொலை

இங்கிலாந்தில் வசித்து வந்தவர், 19 வயது முஸ்லிம் பெண். இவர் அங்கு அரபு முஸ்லிம் ஒருவரை விரும்பி வந்ததாக தெரிகிறது. இதை அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

Update: 2017-07-25 23:00 GMT

லண்டன்,

இந்த நிலையில் அந்தப் பெண்ணும், அவரது தோழியும் கடந்த 19–ந் தேதி மேற்கு லண்டன் பகுதியில் கிங்ஸ்டன் என்ற இடத்தில் அமைந்துள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டுக்கு கடத்திச் செல்லப்பட்டனர்.

அங்கு அவர்கள் கற்பழிக்கப்பட்டனர். 19 வயது பெண் கற்பழிக்கப்பட்டதுடன், கொல்லப்பட்டார். அவரது உடல் அந்த வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனால் அவரது தோழி கற்பழித்து, கொலை முயற்சியில் தொண்டை அறுபட்ட நிலையில் அங்கிருந்து நைசாக தப்பி ஆஸ்பத்திரியில் போய்ச் சேர்ந்தார். அவர் போலீசை உஷார்படுத்தினார்.

அதைத் தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று, இறந்து கிடந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, முஜாகித் அர்ஷித் (வயது 33) என்பவரை கைது செய்தனர். அவர் வின்சென்ட் டப்பு என்ற தனது கூட்டாளியுடன் சேர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. வின்சென்ட் டப்புவும் போலீஸ் பிடியில் சிக்கினார்.

இருவரும் விம்பிள்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அரசு வக்கீல் பினிட்டா கூறும்போது, ‘‘கொல்லப்பட்ட இளம்பெண், அரபு முஸ்லிம் ஒருவருடன் பழகி வந்துள்ளார். ஆனால் தாங்கள் இந்திய முஸ்லிம்களாக இருக்கிறபோது, தங்கள் மகள் அரபு முஸ்லிமுடன் பழகி வருவது குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. அவர்களை இந்த வழக்கில் கைதாகியுள்ள இருவரும் கடந்த 19–ந் தேதி கடத்திச்சென்று இந்த குற்ற சம்பவத்தை நடத்தியுள்ளனர்’’ என கூறினார்.

அதைத் தொடர்ந்து அவர்களை காவலில் வைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்