உலகின் மிகப்பெரும் பணக்காரார் பட்டியலில் பில்கேட்சை பின்னுக்கு தள்ளினார் அமேசான் நிறுவனர்

உலகின் மிகப்பெரும் பணக்காரார் பட்டியலில் பில்கேட்சை அமேசான் நிறுவனர் ஜெப் பேசாஸ் பின்னுக்கு தள்ளியுள்ளார்.

Update: 2017-07-28 03:40 GMT
வாஷிங்டன்,

பிரபல போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டதன் படி உலகின் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் முதல் இடத்தை கடந்த 23 ஆண்டுகளாக தக்க வைத்திருந்தார். இந்த நிலையில், பில்கேட்ஸை அமேசான் நிறுவனர் ஜெப் பேசாஸ் பின்னுக்கு தள்ளி முதலிடம் பெற்றுள்ளதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது. 

அமேசான்.காம் நிறுவன பங்குகள் ஒரு சதவீதம் அதிகரித்த காரணத்தால் ஜெப் பேசாஸின் சொத்து மதிப்பு 90.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக அதிகரித்துள்ளது. பில்கேட்ஸின் சொத்து மதிப்பு 90 பில்லியன் ஆக உள்ளது. அமேசான் நிறுவனத்தில் 81 மில்லியன் பங்குகள் கிட்டத்தட்ட 17 சதவீத பங்குகளை ஜெப் பேசாஸ் கொண்டுள்ளார். ஆனால்,சில மணி நேரத்திலேயே அமேசான் நிறுவனத்தின் பங்கு விற்பனை சரிந்ததால், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் மீண்டும் முதலிடத்திற்கு வந்தார்.    

மேலும் செய்திகள்