பாகிஸ்தான் நாட்டின் இடைக்கால பிரதமராக ஷாஹித் அப்பாஸி தேர்வு

பாகிஸ்தான் நாட்டின் இடைக்கால பிரதமராக ஷாஹித் ககான் அப்பாஸி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Update: 2017-07-29 13:41 GMT
இஸ்லாமாபாத்,

‘பனாமா கேட்’ ஊழலில்  நவாஸ் ஷெரீப், பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.  பதவி விலகியுள்ள நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரரும், பஞ்சாப் மாகாண முதல்- மந்திரியுமான ஷாபாஸ் ஷெரீப் (வயது 65), புதிய பிரதமராக்க அக் கட்சி மேலிடம் எடுத்துள்ளது.  ஷாபாஸ் ஷெரீப்  தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இல்லை என்பதால் உடனடியாக பிரதமர் பதவி ஏற்க முடியாது. அவர் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக வேண்டும். அதற்கு 45 நாட்கள் ஆகும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்நாட்டின் இடைக்கால பிரதமராக பெட்ரோலியதுறை மந்திரி ஷாஹித் ககான் அப்பாஸியை அக்கட்சி தேர்வு செய்துள்ளதாகவும், ஷாபாஸ் ஷெரீப்  பாராளுமன்ற உறுப்பினராக தேர்வாகும் வரை அப்பாஸி இடைக்கால பிரதமராக அவர் செயல்படுவார் என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் செய்திகள்