755 அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற ரஷ்ய அதிபர் புதின் உத்தரவு

755 அமெரிக்க தூதரக அதிகாரிகள் செப்டம்பருக்குள் ரஷ்யாவில் இருந்து வெளியேற வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2017-07-31 04:28 GMT
மாஸ்கோ,

ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கும் மசோதாவுக்கு அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் ஆதரவு அளித்ததையடுத்து, ரஷ்யா அமெரிக்கா மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இதன் எதிரொலியாக ரஷ்யாவில் பணியாற்றி வரும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் 755 பேரை அந்நாடு வெளியேற்ற வேண்டும் ரஷ்ய அதிபர் புதின்  தெரிவித்துள்ளார். 

கடந்த வெள்ளிக்கிழமை ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம், வரும் செப்டம்பருக்குள் அமெரிக்காவில் பணியாற்றும் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை 455 ஆக குறைக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அந்நாட்டு அதிபர் புதின் இந்த தகவலை தெரிவித்துள்ளார். தூதரக மற்றும் தொழில்நுட்ப வல்லுநனர்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்டோர் ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றி வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்