அமெரிக்கா ஹிஸ்புல் முஜாகிதீனை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது வருத்தமளிக்கிறது - பாகிஸ்தான்

அமெரிக்கா ஹிஸ்புல் முஜாகிதீனை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது வருத்தமளிக்கிறது என பாகிஸ்தான் கூறிஉள்ளது.

Update: 2017-08-17 10:11 GMT


இஸ்லாமாபாத்,

காஷ்மீரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தலைவனை பாகிஸ்தானை சேர்ந்த சையது சலாகுதினை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா 2 மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. இந்நிலையில், ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா நேற்று அறிவித்தது. இதன்மூலம், அந்த இயக்கம் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதன்படி, “பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட தேவையான நிதியை அந்த இயக்கம் திரட்ட முடியாது. 

அமெரிக்காவின் அதிகார எல்லைக்குள் இருக்கும் அந்த இயக்கத்தின் சொத்துகள் அனைத்தும் முடக்கப்படுகிறது. அமெரிக்க பிரஜைகள் யாருடனும் ஹிஸ்புல் முஜாகிதீன் எவ்வித பரிமாற்றத்திலும் ஈடுபட முடியாது” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தான் வருத்தம்

அமெரிக்கா ஹிஸ்புல் முஜாகிதீனை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது வருத்தமளிக்கிறது என பாகிஸ்தான் கூறிஉள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நாபீஸ் ஜகாரியா செய்தியாளர்களிடம் பேசுகையில், ஹிஸ்புல் முஜாகிதீனை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது வருத்தமளிக்கிறது என கூறிஉள்ளார். காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் கடந்த 70 ஆண்டுகளாக சரியான முறையில் தொடர்கிறது. காஷ்மீரில் மக்கள் மீது இந்தியா படைகளை பிரயோகிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தானில் செயல்பாட்டை அமெரிக்கா பாராட்டி வருகிறது என கூறிஉள்ளார். 

மேலும் செய்திகள்