சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 200 பேர் கொன்று குவிப்பு

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 200 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

Update: 2017-08-21 22:45 GMT

டமாஸ்கஸ்,

சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய ஐ.எஸ். பயங்கரவாதிகளை அடியோடு ஒழிக்க அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் அங்கு தரை வழியாகவும், வான் வழியாகவும் தாக்குதலை நடத்திவருகிறது.

இந்த நிலையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள டெயிர் அல்–ஜோர் நகரில் ரஷிய படை அதிபயங்கர வான் தாக்குதலை நடத்தியது.

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நிலைகள், ஆயுதகிடங்குகள் மற்றும் பதுங்கு குழிகள் ஆகியவற்றை குறிவைத்து ரஷிய போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.

இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 200 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் அவர்களது ஆயுதகிடங்குகள், வாகனங்கள் உள்ளிடவை நிர்மூலமாக்கப்பட்டன.

இந்த தகவலை ரஷிய ராணுவ அமைச்சகம் தெரிவித்து இருப்பதாக ரஷிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது. இருப்பினும் இந்த தாக்குதல் எப்போது நடத்தப்பட்டது என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்