உலகைச்சுற்றி...

* பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீதான ஊழல் வழக்கை தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு நீதிபதி கலித் மகமது ரன்ஜா ரத்து செய்து விட்டார்.

Update: 2017-08-27 22:00 GMT
* பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீதான ஊழல் வழக்கை தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு நீதிபதி கலித் மகமது ரன்ஜா ரத்து செய்து விட்டார். 11 ஆண்டுகளாக அவர் இந்த வழக்கை சந்தித்து, விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மகள் பக்தவார் சமூக வலைத்தளம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

* பப்புவா நியூகினியா தீவில் நேற்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.6 புள்ளிகளாக பதிவான இந்த நில நடுக்கத்தால், அங்கு பெரும் பதற்றம் நிலவியது. ஆனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதாக தகவல் இல்லை.

* பாகிஸ்தான் தலீபான், ஹக்கானி நெட்வொர்க் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக எடுத்து வருகிற நடவடிக்கைகளைப் பொறுத்துத்தான், அந்த நாட்டுக்கு பாதுகாப்பு நிதி வழங்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகத்தில் பணியாற்றும் அதிகாரி கூறி உள்ளார்.

* இங்கிலாந்தின் தென் பகுதியில் ஹெர்ட்போர்டு ஷயர் நகரில் சுகி ரயாத் என்ற சீக்கியரும், அவரது 17 வயது மகன் ஹர்கீர்த்தும் துப்பாக்கி முனையில் போலீசாரால் கைது செய்து, கை விலங்கிடப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாக யாரோ ஒருவர் செய்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அது துப்பாக்கிச்சூடு சத்தம் அல்ல, அவர்களின் கார் டயர் வெடித்த சத்தம்தான் என பின்னர் தெரியவந்துள்ளது. நடந்த சம்பவத்துக்காக போலீஸ் மன்னிப்பு கேட்டது.

* பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடந்த மாதம் 28-ந் தேதி, அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு தனக்கு எதிராக அளித்த தீர்ப்பு செல்லாது என அறிவித்து, அதை ரத்து செய்யுமாறு அதே கோர்ட்டில் நேற்றுமுன்தினம் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார்.

மேலும் செய்திகள்