பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகளால் திருடப்படும் அபாயத்தில் உள்ளன: அதிர்ச்சி தகவல்

பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகளால் திருடப்படும் அபாயத்தில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2017-09-25 07:29 GMT
புதுடெல்லி,


இந்தியாவுக்கு பதிலடி கொடுப்பதற்காகவே குறுகிய தூர இலக்கை தாக்கும் திறன் வாய்ந்த அணு ஆயுதங்களை தயாரித்து வைத்திருப்பதாக பாகிஸ்தான் பிரதமர்  ஷாகித் கான் அப்பாஸி ஐநா பொதுச்சபை கூட்டத்தில் தெரிவித்தார். மேலும், அணு ஆயுதங்களை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். இவற்றைக் கட்டுப்படுத்துவது மற்றும் இயக்குவது தொடர்பாக அணு ஆயுத ஆணையம் முடிவு எடுக்கும். எனவே, அணு ஆயுதங்கள் பயங்கரவதிகள் கைக்கு சென்றுவிடுமோ என்ற சந்தேகம் தேவையில்லை என்று  தெரிவித்தார். 

ஆனால், தற்போது மாறுபட்ட தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் படி, பாகிஸ்தான் தன்னிடம் உள்ள  அணு ஆயுதங்களை 9 இடங்களில் வைத்திருப்பதாகவும் இந்த அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகளால் திருடப்படும் அபாயமும் இருப்பதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகள்