மனைவியை கார் முன் கட்டிவைத்து ஓட்டிச்சென்ற கணவன் வீடியோ

காரின் முகப்பில் மனைவியை கட்டிவைத்த கணவன் காரை மிக வேகமாக ஓட்டிச் சென்றார்.

Update: 2017-09-30 06:55 GMT
மனைவிக்குத் தண்டனைகொடுக்கும் வகையில், அவரை முகப்பில் கட்டிவைத்து காரை ஓட்டிச்சென்ற கணவனை, போலீஸார் கைது செய்துள்ளனர்.  இந்தச் சம்பவம் ஈரானில் நிகழ்ந்துள்ளது. கணவனுக்கும் மனைவிக்குமிடையே ஏதோ வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மனைவியை மிரட்டும் வகையில், காரின் முகப்பில் அவரைக் கட்டிவைத்த கணவன் காரை மிக வேகமாக ஓட்டிச் சென்றார். இதை யாரும் தடுக்கவும் இல்லை.

காரின் முகப்பில் தொங்கியபடி, அந்தப் பெண் கத்திக்கதறியபடி இருந்தார். தரையில் விழுந்து படுகாயமடைந்தவர், தற்போது, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து போலீஸார், அவர் கணவனைக் கைதுசெய்தனர்.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பரவியதை அடுத்து பலரும் இச்சம்பவத்துக்குக் கண்டனம் எழுப்பியுள்ளனர்.


மேலும் செய்திகள்