பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் இம்ரான்கானுக்கு பிடிவாரண்டு

தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான அமர்வு இம்ரான்கானுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது.

Update: 2017-10-12 22:30 GMT
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் முக்கிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான்–தெக்ரீக்–இ–இன்சாப் கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. 

இந்த வழக்கை தலைமை தேர்தல் ஆணையர் சர்தார் முகமது ராசா தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான அமர்வு இம்ரான்கானுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது. 

மேலும், இம்ரான்கானை கைது செய்து, வருகிற 26–ந் தேதிக்குள் தேர்தல் ஆணையத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் அந்த அமர்வு உத்தரவிட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்