7 வருடங்கள் போராடி தான் திருமணமானவர் இல்லை எனபதை நிரூபித்த நடிகை

நீதி மன்றம் மூலம் 7 வருடங்கள் போராடி தான் திருமணமானவர் இல்லை எனபதை நிரூபித்தார் நடிகை

Update: 2017-11-23 09:45 GMT
பாகிஸ்தான் சினிமா உலகில் புகழ்பெற்ற நடிகை மீரா. 40 வயதான மீரா, சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். மேலும், அரசியலுக்கு வர ஆர்வம் உள்ளவர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு  பைசலாபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஆதிக் உர் ரெஹ்மான், 2007 ஆம் ஆண்டு தனக்கும் மீராவிற்கும் திருமணம் நடைபெற்றதாக கூறினார்.
தன்னை கணவர் என்று மீரா வெளிப்படையாக சொல்லாதது வருத்தமளிப்பதாக குறிப்பிட்ட அவர், ரசிகர்களிடம் மீரா தாம் திருமணம் ஆகாதவர் என்று கூறி வருவதாக குற்றஞ்சாட்டினார்.

மீரா தனது மனைவி என்பதை நிரூபிக்க அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டுமென்றும், தன்னை விவாகரத்து செய்யாமல் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளக்கூடாது, மீரா வாழும் வீடு தனக்கு வேண்டும் மற்றும் வெளிநாடுகள் செல்ல மீராவிற்கு தடை விதிக்க வேண்டும் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி ரெஹ்மான் வழக்கு தொடர்ந்தார்.மீராவின் கன்னித்தன்மை குறித்து மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று ரெஹ்மான் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை லாகூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பாகிஸ்தானில், பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவை இருக்கும் பட்சத்தில் மட்டுமே இது போன்ற மருத்துவ பரிசோதனைகள் அனுமதிக்கப்படும்

"ஆனால், இது போன்ற வழக்குகளில், சம்பந்தப்பட்ட பெண் ஒப்புதலோடுதான் மருத்துவ பரிசோதனையை அனுமதிக்க முடியும். ரெஹ்மானின் வழக்கில் அடிப்படை இல்லாததால் நீதிமன்றம் இவ்வழக்கை தள்ளுபடி செய்தது."

ரெஹ்மானின் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்த மீரா, தனக்கு திருமணம் ஆகவில்லை என்றார். திருமண சான்றிதழை எதிர்த்து 2010 ஆம் ஆண்டு அவர் எதிர்மனு தாக்கல் செய்திருந்தார்.

திருமணம் குறித்து இது மாதிரியான பல வழக்குகளை சந்தித்துள்ளது பாகிஸ்தானிய குடும்பநல நீதிமன்றங்கள். ஆனால் இதில் பிரபலம் சம்பந்தப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.

இந்நிலையில் கடந்த வாரம், மீரா யாரையும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என ரெஹமான் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது லாகூர் சிவில் நீதிமன்றம்.

இதுகுறித்து தீர்ப்பளித்த நீதிபதி பாபர் நதீம், திருமண சான்றிதழ் உண்மையா, போலியா என்று இன்னும் முடிவெடுக்கப்படவில்லை , ஆனால் குடும்பநல நீதிமன்ற சட்டம் 1964ன்-படி மீரா வேறொரு திருமணம் செய்து கொள்வதை தடுக்க முடியாது என்றார்.

ஆனால், அந்த திருமண சான்றிதழ் உண்மை தான் என தெரிய வந்தால் அதற்கான சட்ட விளைவுகளுக்கு மீரா பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார்.
எனினும், இதனை வெற்றியாக கருதிய மீரா, "இறுதியாக தனக்கு நீதி கிடைத்து உள்ளது" என்றார்.

மேலும் செய்திகள்