அயோத்தியில் 1990-ல் கரசேவர்கள் மீது துப்பாக்கி சூடு, முலாயம் சிங்கை கைது செய்ய வேண்டும் விஎச்பி

அயோத்தியில் 1990-ல் கரசேவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்ட முலாயம் சிங்கை கைது செய்ய வேண்டும் என விஎச்பி வலியுறுத்தி உள்ளது.

Update: 2017-11-23 10:02 GMT


லக்னோ,

உத்தரபிரதேச முதல்-மந்திரியாக இருந்த சமாஜ்வாடியின் முலாயம் சிங் யாதவ் 1990-ம் ஆண்டு அயோத்தியில் கரசேவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த போலீசுக்கு உத்தரவிட்டது தொடர்பாக யோகி ஆதித்யநாத் அரசு வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என விஷ்வ இந்து பரிஷத் கேட்டு கொண்டு உள்ளது. 

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ஊடகப்பிரிவு தலைவர் சரத் சர்மா வெளியிட்டு உள்ள அறிக்கையில், “சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் தொடர்ச்சியாக அயோத்தியில் 1990-ம் ஆண்டு கரசேவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த போலீசுக்கு உத்தரவிட்டேன் என தொடர்ச்சியாக கூறிவருகிறார், அவருடைய அறிக்கையை உத்தரபிரதேச அரசு ஒப்புதலாக பார்க்கவேண்டிய அவசியம் உள்ளது, முலாயம் சிங் யாதவை கைது செய்யவேண்டும், போலீஸ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்,” என குறிப்பிடப்பட்டு உள்ளது. இவ்விவகாரத்தை நீதிமன்றத்திற்கும் எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஜாலியன்வாலா பாக்கில் படுகொலையில் ஈடுபட்ட ஜெனரல் டையரை போன்ற நடவடிக்கையில் அயோத்தியில் முலாயம் சிங் யாதவ் நடந்துக் கொண்டு உள்ளார், தன்னுடைய ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவும், வாக்குவங்கியை அதிகரிக்கவும் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டார். அவருடைய மகன் அகிலேஷ் யாதவிற்கும் இதே அறிவுரையை வழங்கினார் என சர்மா கூறிஉள்ளார். 

மேலும் செய்திகள்