வடகொரியாவை அமெரிக்காதான் சீண்டுகிறது: ரஷ்ய அதிபர் புதின் குற்றச்சாட்டு

வடகொரியவை அமெரிக்கா தான் சீண்டுகிறது என்று ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதின் தெரிவித்துள்ளார்.

Update: 2017-12-15 07:52 GMT
மாஸ்கோ,

கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழலை தவிர்க்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகிய 
இருவரும், அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். 

ஆண்டு இறுதி செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ரஷ்ய அதிபர் புதின், மேலும் கூறியதாவது:-"ரஷ்யா அதன் ராணுவம் மற்றும் கடற்படையை மேலும் பலப்படுத்துவதில் முழுமையான கவனம் செலுத்தி வருகிறது.எனவே, அமெரிக்காவுடனான ஆயுதப் போட்டியில் நாங்கள் ஈடுபடவில்லை 

வடகொரியா விவகாரத்தை பொறுத்தவரை  இருநாடுகளும்(அமெரிக்கா) பொறுமையை கடைபிடிக்க வேண்டும். ஒப்பந்தத்தில் இருந்து பின் வாங்கி, அமெரிக்காவை வடகொரியா சீண்டுகிறது.  இருநாடுகளும் பதட்டத்தை தணிக்க முன்வரவேண்டும்.

 வரவுள்ள  தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இதன் மூலம் எனக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகளின் ஆதரவு கிடைக்கும். எனக்கு எதிராக கடும் போட்டி நிலவ வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.ஆனால் எனக்கு எதிராகவும் இறங்குபவர்கள் ரஷியாவின் ஸ்திரதன்மையை குலைக்கும் வகையில் நடந்து கொள்கிறார்கள்”  இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்