பாகிஸ்தானில் போலி என்கவுண்டரில் நடிகர் சுட்டு கொலை; போலீஸ் சூப்பிரெண்டு சஸ்பெண்டு

பாகிஸ்தானில் வளர்ந்து வரும் நடிகரை போலி என்கவுண்டரில் சுட்டு கொன்ற காவல் துறை உயரதிகாரி சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார். #Karachi

Update: 2018-01-22 11:07 GMT

கராச்சி,

பாகிஸ்தானில் வடக்கு வசீரிஸ்தான் பகுதியை சேர்ந்தவர் நகீப் (வயது 27).  இவர் சொராப் கோத் என்ற பகுதியில் கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார்.  அதனுடன் நடிகராவும் இருந்துள்ளார்.

இந்த நிலையில், இவருக்கு தடை செய்யப்பட்ட தெஹ்ரீக் இ தலீபான் பாகிஸ்தான் என்ற அமைப்புடன் தொடர்பு உள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது.  இதனை தொடர்ந்து சந்தேகத்திற்குரிய 3 தலீபான் தீவிரவாதிகளுடன் சேர்த்து நகீப்பையும் போலி என்கவுண்டரில் கடந்த 13ந்தேதி போலீசார் சுட்டு கொன்றனர்.

இதுபற்றி நகீப்பின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சமூக வலைதளத்தினில் சர்ச்சைகளை எழுப்பினர்.  இதனை அடுத்து விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது.  அதில் நகீப்பிற்கு சட்டமீறல் குழுக்கள் அல்லது தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு இல்லை என தெரிய வந்தது.

போலீசார் நடத்தியது போலி என்கவுண்டர் என்பதும் தெரிய வந்தது.  இவ்விவகாரத்தினை தொடர்ந்து போராட்டத்தில் பலர் ஈடுபட்டனர்.  அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.  இதில் பலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில் மூத்த போலீஸ் சூப்பிரெண்டு ராவ் அன்வர் மற்றும் மற்றொரு மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.  கடந்த காலங்களில் இதுபோன்ற பல சர்ச்சைக்குரிய என்கவுண்டர்களை அன்வர் நடத்தியுள்ளார்.

#Karachi #policeofficer

மேலும் செய்திகள்