ஈரானில் 66 பேரை பலி கொண்ட விமான விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணி தீவிரம்

ஈரான் நாட்டின் பயணிகள் விமானம் ஒன்று நேற்றுமுன்தினம் தலைநகர் டெக்ரானில் இருந்து அங்குள்ள யசூஜ் நகரை நோக்கி சென்றபோது, தேனா என்ற மலையின் மீது மோதி நொறுங்கியது.

Update: 2018-02-19 21:45 GMT
டெக்ரான்,

ஈரான் நாட்டின் பயணிகள் விமானம் ஒன்று நேற்றுமுன்தினம் தலைநகர் டெக்ரானில் இருந்து அங்குள்ள யசூஜ் நகரை நோக்கி சென்றபோது, தேனா என்ற மலையின் மீது மோதி நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 60 பயணிகள், விமான சிப்பந்திகள் 6 பேர் என 66 பேரும் பலியாகிவிட்டனர்.

விபத்து நடந்த மலைப்பகுதியில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் பலத்த மழை பெய்து வருவதால் மீட்பு குழுவினர் உடனடியாக அங்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபடுவது கடினம் என்று கூறப்பட்டது. இந்தநிலையில் தேடுதல் மற்றும் மீட்பு குழுவினர் விபத்து நடந்த இடத்தை நேற்று சென்றடைந்து மீட்பு பணிகளை உடனடியாக தொடங்கினர். கடும் பனிமூட்டம் காரணமாக விமானம் விபத்தில் சிக்கியது தற்போது, தெரிய வந்துள்ளது.

விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டனியோ குட்ரஸ் தனது இரங்கலைத் தெரிவித்து உள்ளார். அதில் இறந்தவர்களுக்கு எனது இதயப்பூர்வ அனுதாபங்கள் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

மேலும் செய்திகள்