பாகிஸ்தான் மீது டிரம்ப் அதிருப்தி

உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு போரில் அமெரிக்காவின் கூட்டாளியாக உள்ள பாகிஸ்தான், தனது சொந்த மண்ணிலேயே பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு உறுதியான நடவடிக்கை எடுப்பதில்லை.

Update: 2018-02-23 22:30 GMT

வாஷிங்டன்,

அமெரிக்காவுக்கு அந்த நாட்டின் மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை துணை செய்தி தொடர்பாளர் ராஜ் ஷா நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது:–

பாகிஸ்தானுடனான எங்களது உறவில் நாங்கள் சில தெளிவுகளை மீட்டெடுத்து உள்ளோம். முதல் தடவையாக, பாகிஸ்தானின் செயல்களுக்கு அந்த நாட்டை பொறுப்பேற்க வைக்கிறோம். எங்களின் கவலைகளை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்வதில் மிதமான முன்னேற்றம் கண்டு இருப்பதை நாங்கள் பார்க்கிறோம். அதே நேரத்தில், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையை பொறுத்தவரையில், பாகிஸ்தான் கண்டுள்ள முன்னேற்றத்தில் எங்கள் ஜனாதிபதிக்கு திருப்தி இல்லை.

ஆப்கானிஸ்தானில் எங்கள் கூட்டாளிகளுடன் நெருங்கி பணியாற்றுகிறோம். ஐ.எஸ். பயங்கரவாதிகளின் இருப்பை குறைத்து இருக்கிறோம். நூற்றுக்கணக்கான ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டி உள்ளோம். அவர்களின் முன்னணி தலைவர்களை அழித்து இருக்கிறோம். அவர்களின் தலைமையையும், அவர்களின் தளங்கள் எங்கு உருவானாலும் அவற்றையும் குறிவைத்து ஓய்வு ஒழிச்சல் இன்றி செயல்பட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்