நைஜீரியாவின் போகோ கராம் பள்ளி தாக்குதலுக்கு பின் 110 மாணவிகள் கடத்தல்

நைஜீரியாவின் போகோ கராம் பள்ளி தாக்குதலுக்கு பின் 110 மாணவிகளை தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளதாக அந்நாட்டு தகவல் அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. #BokoHaram #NigeriaNews

Update: 2018-02-26 11:30 GMT
அபுஜா,

போகோ கராம் பள்ளி தாக்குதலுக்கு பின் 110 மாணவிகள் காணாமல் போயிருப்பதாக நைஜீரிய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. நைஜீரியாவின் யோப் மாவட்டத்தின் டப்ஷி பகுதியில் உள்ள அரசு கலை மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில், போகோ கராம் பகுதியின் கிளர்ச்சியாளர்கள் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த பயங்கர தாக்குதலுக்கு பின் 906 மாணவர்களில் 110க்கும் அதிகமான மாணவர்கள் காணாமல் போயிருப்பதாக நைஜீரிய நாட்டு தகவல் அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.  

தாக்குதலுக்கு பின்னர் பயங்கரவாதிகள் அங்குள்ள 110க்கும் அதிகமான பெண்களை கடத்திச் சென்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒன்பது ஆண்டுகள் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பின்னர் இஸ்லாமிய தீவிரவாதிகள் தோல்வியின் விளிம்பில் இருப்பதாக இராணுவம் பல முறை கேள்வி எழுப்பி வந்த நிலையில் இந்த கடத்தல் சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலும் இதே போல் 2014 ஆம் ஆண்டு சிபோக் பகுதியில் நடந்த கொடூர தாக்குதலில் 200 குழந்தைகள் கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்