இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ்- கதே தம்பதிக்கு ஆண்குழந்தை பிறந்தது

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ்- கதே தம்பதிக்கு மூன்றாவதாக ஆண்குழந்தை பிறந்ததுள்ளது.

Update: 2018-04-23 12:30 GMT
லண்டன்,

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்–டயானா தம்பதியரின் மூத்த மகன் இளவரசர் வில்லியமுக்கு ஜார்ஜ் (வயது 4), சார்லோட் (2) என்று 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அவருடைய மனைவி கேதே மிடில்டன், 3–வதாக ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

 இந்த தகவலை இங்கிலாந்து அரண்மனை வெளியிட்டுள்ளது. தாய் மற்றும் குழந்தை என இருவரும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பிறந்து உள்ள  3–வது குழந்தை, இங்கிலாந்து அரியணையில் ஏறும் வாரிசுகளில் 5–வது இடத்தைப் பிடிக்கும் என்றும்  அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் செய்திகள்