சிங்கப்பூரில் இந்திய மாணவி சாதனை மரபணு ரீதியிலான இதய நோய் ஆராய்ச்சியில் விருது

சிங்கப்பூரில் வசித்து வருபவர், இந்திய வம்சாவளி மாணவி விஜயகுமார் ராகவி (வயது 18). சென்னையை சொந்த ஊராக கொண்ட இவர் தற்போது சிங்கப்பூர்வாசியாகி விட்டார்.

Update: 2018-05-04 21:45 GMT

சிங்கப்பூர்,

விஜயகுமார் ராகவி அங்கு மரபணு ரீதியிலான இதய நோய் பற்றி 2 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து ஒரு திட்டத்தை தயாரித்து அளித்து உள்ளார். இதற்காக அவர் நட்சத்திர அந்தஸ்து திறன் தேடல் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

இந்த விருது ரொக்கப்பரிசுடன் கூடியது. வெளிநாட்டு பயணம் ஒன்றையும் இவர் மேற்கொள்ள இந்த விருது வழி வகுத்து தந்து உள்ளது. அத்துடன் கோப்பையும், சான்றிதழும் உண்டு.

இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதுபற்றி விஜயகுமார் ராகவி கூறும்போது, ‘‘இந்த திட்டத்துக்காக கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் செலவழித்தேன். அர்ரித்மியா என்று அழைக்கப்படுகிற இந்த இதய நோய், உலகளவில் மரபணு ரீதியில் ஏற்படக்கூடியது ஆகும். இந்த இதய நோய் திடீரென மரணத்தை ஏற்படுத்தி விடும். நான் வெற்றி பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. இது எதிர்பாராத வெற்றி. இந்த வெற்றியின் மூலம் என் பெற்றோர் மிகுந்த பெருமிதம் அடைந்து உள்ளனர். எதிர்காலத்தில் நான் ஸ்டெம் செல் துறையில் ஆராய்ச்சியாளர் ஆக விரும்புகிறேன்’’ என்று கூறினார்.

மேலும் செய்திகள்