வடமேற்கு பாகிஸ்தானில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்; 9 குழந்தைகள் காயம்

பாகிஸ்தானின் வடமேற்கே 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டு உள்ளது.

Update: 2018-05-09 08:12 GMT

பெஷாவர்,

பாகிஸ்தானின் வடமேற்கே கைபர் பக்துன்குவா மாகாணத்தில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகி உள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையம் வடமேற்கு நகரான பன்னுவில் 12 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டு உள்ளது.  இது ஸ்வட் பள்ளத்தாக்கு மற்றும் பெஷாவர் பகுதிகளிலும் உணரப்பட்டு உள்ளது.

இந்நிலநடுக்கம் டேங்கி பஜார் அருகே பன்னு நகரில் உள்ள அரசு மாதிரி பள்ளி கூடத்திலும் உணரப்பட்டது.  இதனால் பள்ளியின் 2வது மற்றும் 3வது தளத்தில் இருந்து சில குழந்தைகள் கீழே குதித்தனர்.  இதில் 9 குழந்தைகள் காயமடைந்தனர்.  அச்சமடைந்த குடியிருப்புவாசிகள் தங்களது வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

கடந்த ஏப்ரலில் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

மேலும் செய்திகள்