குஞ்சுகளைக் காப்பாற்ற முதலையை பாதை மாற்றி அழைத்துச் சென்ற நாரை

நாரை ஒன்று தனது குஞ்சுகளைக் காப்பாற்ற முதலையை பாதை மாற்றி அழைத்துச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

Update: 2018-05-14 08:02 GMT

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் கோல்ப் மைதானம் ஒன்றில் சாண்ட்ஹில் என்ற நாரை ஒன்று கூடு கட்டி குஞ்சு பொறித்திருந்தது. அப்போது அந்த வழியாகச் சென்ற முதலை ஒன்றைப் பார்த்த ஆண் நாரை தனது பெரிய இறக்கைகளை விரித்தபடி முதலையைப் பயமுறுத்தியது.

 தொடர்ந்து தனது கூடு இருக்கும் பகுதிக்கு முதலை திரும்பி விடாதவாறு அந்த முதலையை வழி மாற்றி அழைத்துச் சென்றது. இந்த வீடியோவை எரிக் ட்ரெக்ஸ்லர் என்பவர் முகநூலில் வெளியிட்ட சில நாட்களுக்குள் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

வீடியோவை பார்க்க

மேலும் செய்திகள்