முன்னாள் உதவியாளரோடு ஓரினச்சேர்க்கை விவகாரம்: மலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராகிம் விடுதலை

முன்னாள் உதவியாளரோடு ஓரினச்சேர்க்கை புகாரில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டிருந்த மலேசியாவின் முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிம், பொது மன்னிப்பின் அடிப்படையில், சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

Update: 2018-05-16 12:14 GMT
மலேசியா,

மலேசிய நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராகிம் (வயது 69). இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக தனது முன்னாள் அந்தரங்க உதவியாளரோடு இயற்கைக்கு மாறாக ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த கோர்ட்டு, அவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து 2014–ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.

அதை எதிர்த்து அவர் மத்திய நீதிமன்றத்தில் மேல்–முறையீடு செய்தார்.

அந்த மேல்–முறையீட்டை தள்ளுபடி செய்தும், தண்டனையை உறுதி செய்தும் 5 நீதிபதிகளை கொண்ட அமர்வு  தீர்ப்பு வழங்கியது. 

இந்தநிலையில்,  அன்வர் இப்ராஹிமை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என  மகாதீர் முகமது, தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார்.  இந்தநிலையில் சமீபத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி அமோகமாக வெற்றி பெற்று மகாதீர் முகமது மலேசியா பிரதமராக பதவியேற்றார். 

அதனை தொடர்ந்து பாலியல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரி சிறையில் உள்ள அன்வர் இப்ராஹிமுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. இதற்கு அந்நாட்டு மன்னர் ஒப்புத வழங்கினார். 

இதனையடுத்து பொது மன்னிப்பின் அடிப்படையில், அன்வர் இப்ராஹிம் இன்று சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.  சிறையிலிருந்து  வெளிவந்த அன்வர் இப்ராகிமிக்கு, அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

மேலும் செய்திகள்