லஷ்கர் இ ஜாங்வி தீவிரவாத அமைப்பின் தலைவர் சுட்டு கொலை; பாகிஸ்தான் ராணுவம் நடவடிக்கை

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ ஜாங்வி என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர் சல்மான் படேனி ராணுவ நடவடிக்கையில் சுட்டு கொல்லப்பட்டார். #TerrorOutfit

Update: 2018-05-17 10:20 GMT

கராச்சி,

பாகிஸ்தானின் தென்மேற்கே பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவெட்டாவில் கிள்ளி ஆல்மஸ் என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் மற்றும் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோர் பதுங்கி உள்ளனர் என ராணுவத்தினருக்கு உளவு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியில் பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டனர்.  இதில் 2 தற்கொலை தீவிரவாதிகள் மற்றும் லஷ்கர் இ ஜாங்வி என்ற தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பின் பலுசிஸ்தான் பகுதி தலைவர் சல்மான் படேனி ஆகியோர் கொல்லப்பட்டனர்.

அந்நாட்டில் ஹசாரா பிரிவை சேர்ந்த சமூகத்தினர் மற்றும் போலீசார் என 100 பேரை கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்தவர் படேனி.  இந்த தாக்குதலில் ராணுவ அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.  4 வீரர்கள் காயமடைந்து உள்ளனர்.  அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது.

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் காவல் துறை பயிற்சி மையத்தில் நடந்த தாக்குதலில் 61 பேர் கொல்லப்பட்டனர்.  இதற்கு இந்த அமைப்பு பொறுப்பேற்றிருந்தது.

மேலும் செய்திகள்