இலங்கையில் பெய்த கனமழைக்கு 21 பேர் பலி; 1.5 லட்சம் பேர் பாதிப்பு

இலங்கையில் பெய்த கனமழைக்கு 21 பேர் பலியாகி உள்ளனர். 2 பேரை காணவில்லை.

Update: 2018-05-26 16:35 GMT

கொழும்பு,

இலங்கையில் கடந்த 16ந்தேதியில் இருந்து வடகிழக்கு பருவமழையால் மலை மாவட்டங்களில் பல பகுதிகளில் நில சரிவு எச்சரிக்கை விடப்பட்டது.  இந்நிலையில் பலத்த மழை மற்றும் வேகமுடன் வீசிய காற்றால் 100 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

இதுபற்றி பேரிடர் மேலாண் மந்திரி துமிண்டா திசநாயகே கூறும்பொழுது, பெருமளவில் மின்னலால் உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன.  9 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.  கனமழைக்கு மொத்தம் 21 பேர் பலியாகி உள்ளனர்.  2 பேரை காணவில்லை.

இதுவரை தற்காலிக நிவாரண முகாம்களில் 45 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.  தொடர்ந்து 72 மணிநேரங்களுக்கு மழை நீடிக்கும் என்றும் 5 மாவட்டங்களில் நில சரிவு ஏற்பட கூடும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.  1.5 லட்சம் பேர் மழையால் பாதிப்படைந்து உள்ளனர்.

கடந்த வருடம் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நில சரிவுகளால் 100 பேர் பலியாகினர்.  110 பேர் காணாமல் போயுள்ளனர்.

மேலும் செய்திகள்