அமெரிக்க வெளியுறவு மந்திரியுடன் பாகிஸ்தான் ராணுவ தளபதி ‘திடீர்’ ஆலோசனை பேசியது என்ன?

பாகிஸ்தானில் அடுத்த மாதம் 25-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதன் காரணமாக அங்கு நீதிபதி நசிருல் முல்க் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்று, நிர்வாகத்தை கவனித்து வருகிறது.

Update: 2018-06-07 22:15 GMT
இஸ்லாமாபாத்,

இந்த தருணத்தில், அந்த நாட்டின் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா, அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவை நேற்று திடீரென தொலைபேசியில் தொடர்பு கொண்டு முக்கிய ஆலோசனை நடத்தினார். இது பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இரு தரப்பு உறவுகள் பற்றி மைக் பாம்பியோவுடன் கமர் ஜாவத் பஜ்வா விவாதித்தார் என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ள வேண்டிய அரசியல் நல்லிணக்க நடவடிக்கைகள் பற்றியும் இருவரும் பேசினர் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இந்த சந்திப்பு பற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹெதர் நவார்ட் விடுத்து உள்ள டுவிட்டர் பதிவில், “தெற்காசியாவில் உள்ள பயங்கரவாத அமைப்புகளை எந்த பாரபட்சமும் இன்றி இலக்கு வைத்து ஒடுக்குவது குறித்து பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வாவுடன் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ விவாதித்தார்” என கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்