மேகன் மெர்க்கல் போல மாற முயலும் பெண்!

சமீபத்தில் இங்கிலாந்து இளவரசர் ஹாரியை மணந்த மேகன் மெர்க்கல் போல மாற ஓர் இளம்பெண் முயன்று வருகிறார்.

Update: 2018-06-23 11:00 GMT
இங்கிலாந்தின் பக்கிக்காம்ஷயர் கவுண்டியை சேர்ந்தவர், 30 வயதான டிரேசி கிஸ். இவருக்கு பிரெட்டி என்ற கணவரும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

மேகனின் தீவிர ரசிகையான டிரேசிக்கு, அவரைப் போல மாற ஆசை. குறிப்பாக, மேகனின் மூக்கும், சிரிப்பும் தனக்கு வர வேண்டும் என விரும்பிய டிரேசி, கணவரின் எதிர்ப்பையும் மீறி அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறார்.

இவர், பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மூக்கை மாற்றிக் கொண்டிருக்கிறார். மேலும் மேகன் போலவே தனது சிரிப்பு இருக்க வேண்டும் என பற்களையும் மாற்றியிருக்கிறார். இதற்காக டிரேசி இதுவரை 9 லட்ச ரூபாய் செலவு செய்திருக்கிறார்.

மேகன் போல மாற டிரேசி இவ்வளவு பணம் செலவழித்தது அவர் கணவர் பிரெட்டிக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவர் இதுகுறித்து டிரேசியுடன் சண்டை போட்டுள்ளார். ஆனால் கணவரின் எதிர்ப்பையும் மீறி டிரேசி இவ்விஷயத்தை மகிழ்ச்சியோடு செய்திருக்கிறார்.

அவர் கூறும்போது, மேகன்- ஹாரி திருமணத்தின்போது நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன்.

அதனால் தொலைக்காட்சி மூலம் அவர்களின் திருமணத்தைப் பார்த்தேன். தற்போது எனக்கு மேகன் போலவே மூக்கும், சிரிப்பும் கொஞ்சம் வந்துள்ளதாக நம்புகிறேன், இதற்கான சிகிச்சையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன் எனக் கூறியுள்ளார்.

அடுத்தவரைப் போல மாறும் மோகம், அளவுக்கு மீறிச் சென்றிருக்கிறது! 

மேலும் செய்திகள்