இந்தோனேஷியா: படகு விபத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட 24 பேர் பலி

இந்தோனேஷியாவில் படகு விபத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட 24 பேர் பலியான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. #Indonesia

Update: 2018-07-04 02:30 GMT
ஜகார்த்தா,

இந்தோனேஷியாவில் படகு விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட 24 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தோனேஷியா தீவுகளுக்கு பிரசித்தி பெற்ற நாடு.  இங்குள்ள ஏராளமான தீவுகளில் உள்ள மக்களின் பொது போக்குவரத்து படகுகள் மூலம் நடைபெற்று வருகிறது. மேலும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் இந்தோனேஷிய தீவுகளை ரசிப்பதற்காக இங்கு வருவது உண்டு.

இந்நிலையில் அங்குள்ள சுலாவெசி தீவில் இருந்து 139 பயணிகளுடன் சிலாயர் தீவை நோக்கி படகு சென்று கொண்டிருந்தது. படகு துறையில் இருந்து 300 மீட்டர் சென்ற போது மோசமான வானிலை காரணமாக படகு தண்ணீரில் தத்தளித்தது. மேலும் பலத்த காற்று காரணமாக எழுந்த பேரலைகளில் சிக்கி படகு மூழ்கத் துவங்கியது. இந்த படகு விபத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட 24 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதில் 74 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 41 பேர்களை தேடும் பணி நடைப்பெற்று வருவதாகவும் இந்தோனேசியா பேரழிவு நிர்வாக அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பயணிகள் அனைவரும் உயிர்காப்பு கவசம் அணிந்திருந்ததால் ஒரளவு பலி எண்ணிக்கை குறைந்ததிருந்தது. மேலும் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் இருந்து புறப்பட்ட ஒரு படகில் இருந்து 160 பேர் மாயமாகியுள்ளதாகவும், மோசமான வானிலை காரணமாக தொடர்புகொள்ள முடியவில்லை என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

மேலும் செய்திகள்