அபூர்வ பழுப்பு நிற பாண்டா கரடி கண்டுபிடிப்பு!

சீனாவில் அபூர்வமான பழுப்பு நிற பாண்டா கரடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-07-07 07:19 GMT
சீனாவின் தேசிய விலங்கான பாண்டா கரடி, பொதுவாக கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் மட்டுமே காணப்படும்.

ஆனால் அந்நாட்டின் ஷான்ஷி மாகாணத்தில் உள்ள மூங்கில் காடுகளில் பழுப்பு நிற பாண்டா கரடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான வெள்ளை நிறத்துடன், கருப்புக்குப் பதிலாக பழுப்பு நிறத்தில் உள்ளது.

இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ஷான்ஷி வனப்பகுதியில் முதன் முறையாக இந்தக் கரடி பார்க்கப்பட்டுள்ளது. இந்த அபூர்வ வகை பாண்டாவை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’ எனத் தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகள்