இளம் பெண் மரணம்: கொலையா? தற்கொலையா? ஆஸ்திரேலிய போலீசார் குழப்பம்

இளம் பெண் பெட்ரோல் ஊற்றி எரிந்து மரணம் அடைந்த நிலையில் அது கொலையா அல்லது தற்கொலையா என போலீசார் இன்னும் கண்டுப்பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.

Update: 2018-07-10 10:59 GMT
சிட்னி

ஆப்கானிஸ்தானை சேர்ந்த சதிப் கரீமி என்ற பெண் திருமணமாகி ஆஸ்திரேலியாவுக்கு சென்ற நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் பெட்ரோல் ஊற்றி எரித்து  தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்யும் எண்ணத்தில் கரீமி தன் மீது பெட்ரோல் ஊற்றி தன்னை எரித்து கொண்டதாக கரீமியின் கணவர் குடும்பத்தார் கூறினார்கள்.ஆனாலும் இதை வைத்து போலீசாரால் இது தற்கொலை தான் உறுதியான முடிவுக்கு வரமுடியாத நிலையில் தொடர்ந்து விசாரணை நடத்தி  வருகிறார்கள்.

அதாவது தனது வீட்டில் பார்த்து திருமணம் செய்துவைத்த நபரை பிடிக்காமலேயே அவருடன் கரீமி வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. விக்டோரியாவில் உள்ள உதவி மையத்தை டிசம்பர், ஜனவரியில் தொடர்பு கொண்ட கரீமி கணவர் வீட்டார் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், நடுஇரவில் மழை பெய்தபோது வீட்டை விட்டு துரத்தியதாகவும் கூறியுள்ளார்.இதையடுத்து போலீசார் கரீமி கணவரை கைது செய்து விசாரித்த நிலையில் அவர் மீது தவறில்லை என விடுதலை செய்தனர். இது குறித்து பேசிய கரீமியின் தந்தை ஹஜி ஜடா, என் மகளின் மரணத்தை இன்னும் ஜீரணிக்க முடியவில்லை.

என் உடலில் ஒரு பகுதியை இழந்தது போல உணர்கிறேன், நாங்கள் ஆப்கானிஸ்தானின் சிறுகிராமத்தில் இருந்ததால் கரீமியின் இறுதிசடங்கில் கூட கலந்து கொள்ள முடியவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்