உலகைச் சுற்றி...

* ஜப்பானில் பெய்த வரலாறு காணாத மழை, வெள்ளம், நிலச்சரிவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 156 ஆக உயர்ந்தது.

Update: 2018-07-10 22:00 GMT
* இத்தாலியில் சர்டினியா தீவில் நடந்த விபத்து ஒன்றில் அமெரிக்க நடிகரும், இயக்குனருமான ஜார்ஜ் குளூனி படுகாயம் அடைந்தார். அவர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இங்கிலாந்து வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை தொடர்ந்து அவரது இடத்துக்கு ஜெரேமி ஹண்ட் என்பவரை பிரதமர் தெரசா மே நியமித்து உள்ளார்.

* வருடாந்திர போர் பயிற்சியை தென்கொரியா ரத்து செய்து உள்ளது. வட கொரியாவுடனான பேச்சுவார்த்தையில் ஏற்பட்டு உள்ள முன்னேற்றமாக இது பார்க்கப்படுகிறது.

* மாசு கட்டுப்பாட்டு விதி மீறல் குற்றச்சாட்டின் பேரில் நூற்றுக்கணக்கான அதிகாரிகளை சீனா சிறையில் அடைத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் செய்திகள்