இம்ரான்கான் உள்ளிட்ட 6 தலைவர்கள் உயிருக்கு ஆபத்து

பாகிஸ்தானில் வரும் 25–ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து வருகிறது.

Update: 2018-07-10 22:30 GMT
‘இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது 6 அரசியல் தலைவர்களது உயிருக்கு ஆபத்து உள்ளதாக பட்டியல் வெளியிட்டு, தேசிய பயங்கரவாத தடுப்பு ஆணையம் எச்சரிக்கை வெளியிட்டு உள்ளது.

அந்த பட்டியலில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான், அவாமி தேசிய கட்சி தலைவர்கள் அஸ்பந்தியர் வாலி, அமீர் ஹைதர் ஹோட்டி, காமி வதான் கட்சி தலைவர் அப்தாப் ஷெர்பாவ், ஜாமியத் உலமா இ இஸ்லாம் பாசில் தலைவர் அக்ரம் கான் துர்ரானி, மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் மகன் டால்ஹா சயீத் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவர்களின் உயிருக்கும் ஆபத்து உள்ளதாக தேசிய பயங்கரவாத தடுப்பு ஆணையத்தின் இயக்குனர் ஒபைத் பரூக் கூறினார்.

பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்துக்கும், மாகாண உள்துறை அமைச்சகங்களுக்கு 12 பயங்கரவாத உஷார்குறிப்புகளை அனுப்பி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்