சிரியாவில் வான்தாக்குதல் 54 பேர் உயிரிழப்பு

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

Update: 2018-07-13 22:30 GMT

பெய்ரூட்,

சிரியாவில்  ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரும் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரை குறிவைத்து அமெரிக்க கூட்டுப்படையினர் அங்கு அவ்வப்போது வான் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

சிரியாவில் யூப்ரடீஸ் நதிக்கு கிழக்கில் அமைந்து உள்ள அல்பு கமால் நகரம், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரின் பிடியில் உள்ள நகரங்களில் ஒன்று.

அந்த நகரத்தின்மீது அமெரிக்க கூட்டுப்படையினர் கடுமையான வான் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த தாக்குதலில் 54 பேர் உயிரிழந்து உள்ளதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று அறிவித்து உள்ளது.

ஆனால் இது தொடர்பாக அமெரிக்க கூட்டுப்படையினர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

அதே நேரத்தில் இந்த வான்தாக்குதலில் அல்பு கமால் நகரம் மட்டுமல்லாது, அல் சவுசா, அல் பாகவுஸ் பாவ்கனி நகரங்களும் சிக்கியதாக உள்ளூர் தகவல்களை மேற்கோள் காட்டி ‘சனா’ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்