செவ்வாய் கிரகத்தில் சிலந்திகள் ஊர்ந்து சென்றதற்கான அடையாளங்கள்

நாசா வெளியிட்ட புகைப்படத்தில் செவ்வாய் கிரகத்தில் சிலந்திகள் ஊர்ந்து சென்றதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன.

Update: 2018-07-17 06:18 GMT
கடந்த பல வருடங்களாக அமெரிக்காவின் நாசா உள்ளிட்ட உலகின் பல விண்வெளி ஆய்வு நிறுவனங்களின் விருப்ப கிரகமாக இருப்பது செவ்வாய். முக்கியமாக, மனித செயல்பாடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் காரணமாக உயிர் வாழ்க்கைக்கான சூழலியலை நம் பூமியானது வேகமாக இழந்து வருகிறது. அதனால், மனிதனின் அடுத்த புகலிடமாக இருக்கப்போவது விண்வெளியில் உள்ள நிலவுகள் அல்லது கிரகங்களில் ஒன்றா அல்லது செவ்வாய் கிரகமா என்ற விவாதங்களும், கணிப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற விவாதங்களுக்கும் கணிப்புகளுக்கும் வலு சேர்க்க, நாசா கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கியூரியாசிட்டி (Curiosity rover) என்ற நடமாடும் ஆய்வுக்கூடம் ஒன்றை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது. 

கடந்த 5 வருடங்களாக, செவ்வாய் கிரக மாதிரிகளில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகம் தொடர்பான  புகைப்படங்களை அனுப்பி வருகின்றது.

அவ்வாறு அனுப்பப்பட்ட படங்களில் செவ்வாய் கிரகத்தில் சிலந்திகள் ஊர்ந்து சென்றதற்கான அடையாளங்கள் காணப்படுவது போன்ற படத்தினை நாசா நிறுவனம் வெளியிட்டுள்ளது.நேற்றைய தினம் செயற்கைக் கோளின் உதவியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்திலேயே இவ்வாறான தோற்றம் தென்பட்டுள்ளது. எனினும் இப்புகைப்படத்தில் காணப்படும் ஆதாரம் தொடர்பாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.

மேலும் செய்திகள்