சந்திரனுக்கு செல்லும் அஸ்தி

நாசாவைச் சேர்ந்த பொறியியலாளர் தாமஸ் சைவைட், இறந்தவர்களின் அஸ்தியை சந்திரனில் கொண்டு வைப்பதற்கு ‘எலிசியம்’ என்ற நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறார்.

Update: 2018-07-20 08:17 GMT
‘‘எல்லோருக்கும் சொர்க்கம் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. சொர்க்கத்துக்கு என்னால் வழிகாட்ட இயலாது என்பதால், சந்திரனுக்காவது அஸ்தியைக்கொண்டு செல்லலாம் என்று இந்த நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறேன்.

சந்திரனை விரும்பாதவர்களே உலகில் இல்லை. அந்தச் சந்திரனில் சாம்பலைத் தூவுவதன் மூலம் அவர்கள் விருப்பத்தை நிறைவேற்ற இயலும் என்று நினைக்கிறேன். அதற்காக விண்வெளி நிறுவனமான அஸ்ட்ரோபோடிக் டெக்னாலஜியுடன் இணைந்து இந்தக் காரியத்தில் இறங்கியிருக்கிறேன்’’ என்கிறார் தாமஸ்.

2013-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனத்தில், ஏராளமானோரின் அஸ்திகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் எப்போது நிலாவிற்கு பறக்கும் என்ற பெரிய கேள்விக் குறியுடன், பணம் செலவழித்தவர்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். 

மேலும் செய்திகள்