வடகொரியாவில் ஏவுகணை சோதனை மையங்களை அழிக்கும் செயற்கைகோள் புகைப்படங்கள்

வடகொரியாவில் ஏவுகணை சோதனை மையங்களை அழிக்கும் செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

Update: 2018-07-24 08:31 GMT

அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் உலக நாடுகளை வடகொரியா அச்சுறுத்தி வந்தது. இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் போர் பதற்றம் நிலவி வந்த நிலையில், வடகொரியா- தென் கொரியா தலைவர்களின் பேச்சுவார்த்தை நடந்தது.

இதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி சிங்கப்பூரில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்- கிம் ஜாங் உன் சந்திப்பு நிகழ்ந்தது.

இதன் போது ஏவுகணை சோதனைகளை கைவிடுவதாக கிம் ஜாங் உன் உறுதியளித்தார். மேலும் அணு ஆயுதங்கள் அனைத்தையும் அழித்து விடுவதாகவும் உறுதியளித்திருந்தார்.

இது முற்றிலுமாக நிறைவேற்றப்படும் பட்சத்தில் பொருளாதார தடை நீக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து சோகே என்னும் இடத்தில் ராக்கெட் ஏவுதளத்தை அழிக்கும் நடவடிக்கையை வடகொரியா தொடங்கிவிட்டதாம், இதற்கான செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

மேலும் செய்திகள்