உலக மக்களை கவர்ந்த முஸ்லீம் நபர் வீடியோ

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது மசூதியின் இமாம் தொழுகை நடத்திய காட்சி வைரலாக பரவி உலக மக்களை கவந்துள்ளது.

Update: 2018-08-07 05:22 GMT
இந்தோனேஷியாவில்  சுமத்ராவை ஒட்டியுள்ள பாலி மற்றும் லம்பாக் தீவின் அருகே நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7 ஆக நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 91 பேர் உயிரிழந்துள்ளனர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் அருகாமையில் உள்ள பாலி நகரத்திலும் உணரப்பட்டது. அப்போது அங்குள்ள மசூதிகளில் மாலைவேளை தொழுகை நடந்து கொண்டிருந்தது. நிலநடுக்கத்தால் அங்குள்ள ஒரு மசூதி கட்டிடம் பெரிய அளவில் அதிர்ந்தது.

இறை வணக்கமான தொழுகையில் ஒருமுகப்பட்டு இருக்கும் வேளையில் இதைப்பற்றி கவலைப்படாத அந்த மசூதியின் இமாம், நிலநடுக்கத்தால் தனது உடல் தள்ளாடி, தடுமாறிய வேளையிலும், பக்கவாட்டில் உள்ள சுவரின்மீது ஒருகையை தாங்கியபடி, தொழுகைக்கு தலைமை தாங்கி நடத்திகொண்டிருந்தார்.இதுதொடர்பான வீடியோ வெளியான ஒருமணிநேரத்தில், உலகம் முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு பயந்து மக்கள் ஒடுகையில், தனது பக்தியில் கவனம் செலுத்தி அவரை புகழ்ந்துள்ளனர்.


மேலும் செய்திகள்