உலகைச் சுற்றி...

* ஈரான் நாட்டுடனான தங்களது வர்த்தக உறவு பிற எந்த ஒரு நாட்டினரின் நலனையும் பாதிக்காது என்று சீனா கூறி உள்ளது.

Update: 2018-08-11 22:30 GMT
* பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் வெளிநாட்டினர் பயணம் செய்த பஸ் மீது தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் லாரியை மோதி தாக்குதல் நடத்த முயற்சித்தார். இந்த சம்பவத்தில் சீன நாட்டினர் 3 பேரும், பாதுகாப்பு படையினர் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

* இந்தோனேசியாவில் லாம் போக் தீவில் சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று 387 ஆக உயர்ந்து விட்டது.

* கவுதமாலா நாட்டின் அதிபர் ஜிம்மி மொராலசுக்கு எதிராக வழக்கு தொடர முடியாது. அவருக்கு விலக்குரிமை தரப்பட்டு உள்ளது. இந்த உரிமையை பறிக்கும் முயற்சியில் அந்த நாட்டின் அட்டார்னி ஜெனரலும், ஐ.நா. சபையின் ஆதரவை பெற்ற விலக்கு உரிமைக்கு எதிரான சர்வதேச ஆணையமும் ஈடுபட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

* இங்கிலாந்தில் சாலிஸ்பரி நகர் அருகே உள்ள ராணுவ தொழிற்சாலை ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் பலி ஆனார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

* பாகிஸ்தான் மக்கள் நாளை மறுநாள் (14–ந் தேதி) சுதந்திர தினத்தை உற்சாகமாக கொண்டாட வேண்டும் என்று அந்த நாட்டின் பிரதமராக பதவி ஏற்க உள்ள இம்ரான்கான் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

மேலும் செய்திகள்