டிரம்பின் தொலைபேசி உரையாடல் டேப் ஒன்றை முன்னாள் ஆலோசகர் வெளியிட்டார்

டொனால்ட் டிரம்பின் தொலைபேசி உரையாடல் டேப் ஒன்றை அவருடைய முன்னாள் ஆலோசகர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

Update: 2018-08-14 09:47 GMT
வாஷிங்டன்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தொலைபேசி உரையாடல்  டேப் ஒன்றை  அவருடைய முன்னாள் ஆலோசகர் ஒருவர் வெளியிட்டுள்ளார். ’ இவர் வெள்ளை மாளிகையில் பணியில் இருந்து நீக்கப்பட்டவர் ஆவார்.

அமெரிக்க தொலைக்காட்சியான என்பிசியில் ஒளிபரப்பப்பட்ட அந்த டேப்பில் டிரம்பின் குரல் என்று நம்பப்படும் குரல், ஒமராசா மனிகால்ட் நியூமேன் என்னும் அந்த ஊழியர் முந்தைய நாள் பணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து வெளிப்படுத்துகிறது. 

"இதுகுறித்து யாரும் என்னிடம் எதுவுமே சொல்லவில்லை" என அந்த ஆண் குரல் கூறுகிறது. அதிருப்தியில் உள்ள ஒரு முன்னாள் ஊழியர் என்று அவரை வெள்ளை மாளிகை விவரித்துள்ளது. அவர் பணியை இழந்தபின் தன்னை தாக்கி பேசுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் அனைவரும் பொய் சொல்கின்றனர். எனவே என் பாதுகாக்க நான் இந்த டேப்பை வெளியிடுகிறேன்" என நியூமேன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்