விமானத்தில் தூங்கிய பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷம் - இந்திய ஐ.டி. நிறுவன அதிகாரி குற்றவாளி என தீர்ப்பு

அமெரிக்காவில் நடுவானில் விமானத்தில் தூங்கிய பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட இந்திய ஐ.டி. நிறுவன அதிகாரி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-08-17 22:09 GMT
வாஷிங்டன்,

அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் 2 ஆண்டுகளாக அதிகாரியாக வேலை பார்த்து வந்தவர் பிரபு ராமமூர்த்தி (வயது 35). இந்தியர். இவர் 7 மாதங்களுக்கு முன்பு ஒரு நாள், தனது மனைவியுடன் லாஸ்வேகாஸ் நகரில் இருந்து டெட்ராய்ட் நகருக்கு ‘ஸ்பிரிட் ஏர்லைன்ஸ்’ விமானத்தில் பயணம் செய்தார்.

3 பேர் அமரக்கூடிய இருக்கையில் நடுவில் பிரபு ராமமூர்த்தியும், அவரது இடதுபுறம் மனைவியும், வலதுபுறம் ஜன்னலோரம் 22 வயதான மற்றொரு பெண்ணும் அமர்ந்து இருந்தனர். அந்தப் பெண் ஆழ்ந்து தூங்கிய நேரத்தில், பிரபு ராமமூர்த்தி பாலியல் ரீதியில் தொல்லைகள் செய்தார். ஒரு கட்டத்தில் அவரது கைகள் தன் உடல் மீது படர்வதை உணர்ந்து, அந்தப் பெண் விழித்து விட்டார். அவர் தனது உடைகள் கலைக்கப்பட்டிருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பான புகாரின்பேரில் பிரபு ராமமூர்த்தி மீது டெர்ரன்ஸ் பெர்க் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், அவர் குற்றவாளி என நீதிபதி நேற்று தீர்ப்பு அளித்தார். தண்டனை விவரம் டிசம்பர் மாதம் 12-ந் தேதி அறிவிக் கப்படும். அவருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும் செய்திகள்