ஆப்கானிஸ்தானில் 65 தலீபான்கள் பலி: அப்பாவி மக்கள் 16 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் 65 தலீபான்கள் பலியானதுடன், அப்பாவி மக்கள் 16 பேர் உயிரிழந்தனர்.

Update: 2018-08-17 22:45 GMT
பாரா,

ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் பாரா மாகாணம் உள்ளது. அங்கு பாலாபாலுக் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தலீபான் பயங்கரவாதிகளை குறிவைத்து போலீஸ் படையினர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதல்களில் 65 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் 16 பேர் பலியாகி விட்டதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

இதுபற்றி பாரா போலீஸ் உயர் அதிகாரி அகமது ஷெர்சாத் கூறுகையில், “ டோடாங்க், சீவான், சஜ்வி, சபாரக் பகுதிகளில் தலீபான் பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அவற்றில் 65 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயம் அடைந்தனர். 10 கார்கள், மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன. பயங்கரவாதிகள் பதுங்குமிடங்கள் அழிக்கப்பட்டன” என்று குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்