ஒயின் நகப்பூச்சு

நகம் கடிக்கும் பழக்கம் பலரையும் தொற்றிக் கொண்டிருக்கிறது. அதில் இருந்து மீள்வதற்காக நகப்பூச்சுக்களை பூசிக் கொள்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

Update: 2018-08-19 07:47 GMT
ஆனால் ரசாயன நகப்பூச்சுகளால் தீங்கு ஏற்படும்.அந்த தீங்கை போக்கும் வகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த க்ரூபான் என்ற நிறுவனம் சாப்பிடக்கூடிய நகப்பூச்சை உருவாக்கியிருக்கிறது. அதற்கு ப்ராஸிக்கோ என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

“இத்தாலிய ஒயினின் சுவையிலும், நறுமணத்திலும் இந்த நகப்பூச்சை உருவாக்கி இருக்கிறோம். சாப்பிடக்கூடிய நகப்பூச்சாக இருந்தாலும் அதிக வெப்பமான இடம், நெருப்பு ஆகியவற்றுக்கு அருகில் வைக்கக்கூடாது. ஏனெனில் இந்த நகப்பூச்சு எளிதில் தீப்பிடித்துவிடும் தன்மை கொண்டது. நகங்களில் நகப்பூச்சை பூசிய பிறகே சுவைக்க வேண்டும். நேரடியாகப் பாட்டிலில் இருந்து எடுத்து அப்படியே குடித்துவிடக்கூடாது. அதுபற்றிய விளக்கங்களையும் பாட்டிலில் கொடுத்திருக்கிறோம்” என்கிறது க்ரூபான் நிறுவனம். 

மேலும் செய்திகள்