ஐநா சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் தலைவராக இந்தியர் நியமனம்

ஐக்கிய நாடுகள் சபையின் துணை பொதுச்செயலாளராக இந்தியாவை சேர்ந்த சத்யா.எஸ். திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2018-08-28 06:19 GMT
நியூயார்க்,

ஐக்கிய நாடுகள் சபையின் துணை பொதுச்செயலாளராக இந்தியாவை சேர்ந்த சத்யா.எஸ். திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் தலைவராக இவர் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 ஆண்டுகளாக ஐ.நா-வில் பணியாற்றி வரும் திரிபாதி பல்வேறு முக்கிய திட்டங்களில் பங்களித்துள்ளார். ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய கண்டங்களில் மனித உரிமை, ஜனநாயகம், சட்ட விவகாரங்கள் போன்றவற்றில் அனுபவம் கொண்டவர். ஐநா சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் கீழ், 2030ம் ஆண்டுக்குள் உலகை மறுசுழற்சி முறையில் கொண்டு செல்ல வரையப்பட்டுள்ள திட்டத்தில் முக்கிய பங்காற்றி வருகிறார். 35 ஆண்டுகளாக வழக்கறிஞராகவும் பொருளாதார வல்லுநராகவும் செயல்பட்டுள்ளார்.  2004ம் ஆண்டு சுனாமியால் ஏற்பட்ட பேரழிவின் பின், இந்தோனேஷியாவில் ஐநா நடத்திய நிவாரண பணிகளுக்கு தலைமை வகித்த அனுபவமும் இவருக்கு உண்டு. 
 
திரிபாதியை, ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்ரெஸ் துணை பொதுச்செயலாளர் பதவியில் நேற்று நியமித்தார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐநா சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவை இனி திரிபாதி வழிநடத்துவார்.

மேலும் செய்திகள்