அமெரிக்காவுக்கு சட்டவிரோத முறையில் படகில் சென்ற 2 இந்தியர்கள் உள்பட 19 பேர் கைது

மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்டவிரோத முறையில் படகில் சென்ற 2 இந்தியர்கள் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-08-28 12:03 GMT

நியூயார்க்,

மெக்சிகோவில் இருந்து பங்கா வகை படகு ஒன்று பலரை ஏற்றி கொண்டு அமெரிக்க கடற்பகுதிக்குள் நுழைந்தது.

இதனை வான் மற்றும் கடல்வழி நடவடிக்கைகளுக்கான விமானம் ஒன்று கண்டறிந்தது.  இதுபற்றி அமெரிக்க கடலோர காவல் படையிடம் தகவல் தெரிவித்தது.  இதனை அடுத்து கலிபோர்னியாவில் உள்ள பாயிண்ட் லோமா பகுதியில் இருந்து 24 கிலோ மீட்டர்கள் மேற்கே அந்த படகு அமெரிக்க கடலோர காவல் படையால் தடுத்து நிறுத்தப்பட்டது.

அந்த படகில் மொத்தம் 19 பேர் இருந்துள்ளனர்.  அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.  அவர்களில் 2 பேர் சந்தேகத்திற்குரிய வகையிலான கடத்தல்காரர்கள் என கண்டறியப்பட்டு உள்ளனர்.  மற்ற 17 பயணிகளும் சட்டவிரோத முறையில் மெக்சிகோவில் இருந்து வந்தவர்கள்.  இவர்களில் 2 பேர் இந்தியர்கள் என அறியப்பட்டு உள்ளது.  ஆனால் அவர்களை பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.

அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றி கடற்பகுதி வழியே நுழையும் நபர் ஒருவரை உள்நாட்டு பாதுகாப்பு துறையானது அனுமதிப்பது இல்லை.  இதுபோன்று நுழைபவர்கள் சட்டவிரோத முறையில் வருபவர்கள் என கணக்கில் எடுத்து கொள்ளப்படுகின்றனர்.

மேலும் செய்திகள்