சமூக வலைதளங்கள் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்கின்றன : டொனால்டு டிரம்ப் குற்றச்சாட்டு

கூகுள், டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்வதாக டொனால்டு டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.

Update: 2018-08-29 06:37 GMT
வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் "பலரை கூகுள் தங்களுக்கு ஏற்றாற்போல் பயன்படுத்தி கொள்கிறது. அது கடுமையாக கவனித்தக்க வேண்டிய விஷயம். டிரம்ப் நியூஸ் என்ற தேடல் வார்த்தைக்கு கூகுளில் ஒருதலைபட்சமான செய்திகள் வருகிறது. அந்நிறுவனங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிகபடியான புகார்கள் வருகின்றன" என தெரிவித்தார். ஆனால் எம்மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவிக்கவில்லை. 

ஒழுங்கு நடைமுறைகள் குறித்து நிர்வாகம் ஆலோசித்து வருவதாக டிரம்பின் உதவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் கூகுள் தேடு தளம் அரசியல்சார்பற்று வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் எந்த ஒரு அரசியல் கட்சியின் கொள்கைக்கும் ஆதரவளிக்கவில்லை என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்