உலகைச் சுற்றி

* அமெரிக்காவில் தங்கி வேலை வாய்ப்பு பெறுவதற்கான ‘எச்–1பி’ விசாவிற்கான சிறப்பு பரிசீலனை (பிரிமியம் நடைமுறை) மேலும் 5 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

Update: 2018-08-29 21:30 GMT
* அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வாஷிங்டனில் கிறிஸ்தவ மத போதகர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், ‘‘நவம்பர் 6–ந் தேதி அமெரிக்காவில் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தல், எனக்கு மட்டுமான பொது வாக்கெடுப்பு அல்ல. இது உங்கள் மதத்தின் மீதான பொதுவாக்கெடுப்பும் ஆகும். இது பேச்சு சுதந்திரத்தின் மீதான பொதுவாக்கெடுப்பு. இதில் குடியரசு கட்சி தோற்றால் வன்முறை ஏற்படும்’’ என எச்சரிக்கை விடுத்தார்.

* பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்த உள்ளூர் திருவிழா ஒன்றில் குண்டு வெடித்தது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். 37 பேர் படுகாயம் அடைந்தனர்.

* ஐ.நா. பொதுச்சபை கூட்டம், அடுத்த மாதம் 18–ந் தேதி தொடங்குகிறது. நாட்டின் பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டியது இருப்பதால், இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கலந்துகொள்ளமாட்டார் என தெரியவந்து உள்ளது. அவருக்கு பதிலாக வெளியுறவு மந்திரி மக்மூத் குரேஷி தலைமையிலான குழுவினர் அந்த கூட்டத்துக்கு செல்கின்றனர்.

* இங்கிலாந்து நாட்டின் லீத் நகரில் உள்ள சீக்கியர்கள் வழிபாட்டு தலத்தில் (குருநானக் குருத்வாரா) யாரோ தீ வைத்து சேதப்படுத்தி விட்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

* ஏமன் நாட்டில் இருந்து சவுதி அரேபியாவின் நஜ்ரன் பிராந்தியத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் சேத விவரம் தெரியவரவில்லை. 

மேலும் செய்திகள்