உலக செய்திகள்
நடுரோட்டில் கட்டி புரண்டு சண்டையிட்ட தங்கையின் வீடியோவை வெளியிட்ட சகோதரி

அமெரிக்காவில் சியர்லீடராக இருந்துவரும் மாணவி ஒருவர் மற்றொரு பெண்ணுடன் பயங்கரமாக சண்டை போடும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த சவன்னாஹ் ஸ்பிராக் என்ற மாணவி சியர்லீடராக பணியாற்றி வருகிறார். இவர் பள்ளி வளாகத்தில் தன்னுடைய சியர்லீடர் உடையில் அமர்ந்திருக்கும்போது அருகில் வந்த பெண் ஒருவர் சண்டைக்கு அழைக்கிறார்.

அதற்கு மறுப்பு தெரிவித்து சவன்னாஹ், நாங்கள் உன்னை பற்றி பேசவில்லை என பதிலளிக்கிறார். தொடர்ந்து வாக்குவாதம் செல்லும்போது, ஒரு கட்டத்தில் அடையாளம் காணமுடியாத அந்த பெண் சவன்னாஹ்வின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விடுகிறார்.

அடுத்த சில நிமிடத்திலேயே இருவரும் கட்டி புரண்டு சண்டை போடுகின்றனர். அந்த வீடியோ இறுதியில் அடையாளம் தெரியாத பெண்ணை சவன்னாஹ்  பயங்கரமாக தாக்குவதை போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.

இந்த வீடியோவினை இணையத்தில் வெளியிட்ட சவன்னாஹ் வின் அக்கா சியரா, தன்னுடைய தங்கையை நினைத்து பெருமை கொள்வதாக குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியான சில மணி நேரத்திலே 80 லட்சம்   பார்வையாளர்களை கடந்தது. அதேசமயம் பலராலும் பகிரப்பட்டு இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில் இளைஞர் ஒருவர், சவன்னாஹ் அடையாளம் தெரியாத பெண்ணிடம் அடிவாங்கும் வீடியோவினை வெளியிட்டு, இதை நினைத்து தான் நீங்கள் பெருமைப்படுகிறீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.


so my little sister got in a fight tonight and i don’t think i’ve ever been more proud 😂😂 with her phone in her hand & everything lmao THATS MY MF SISTER LETS GOOOOOOO pic.twitter.com/8Bpxc30d0Z — sierra sprague (@sierrasprague) September 8, 2018